மோடி பிரதமராக பதவியேற்கும் விழா நாளை மாலை 7 மணிக்கு நடைபெறுகிறது. இதில் 8 நாடுகளைச் சேர்ந்த தலைவர்களும், இந்தியாவின் முக்கிய அரசியல் கட்சி தலைவர்களும் கலந்து கொள்கின்றனர். இந்நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பங்கேற்க அழைப்பு வந்ததாகவும், அவர் சார்பில் திமுக மூத்த எம்பிக்கள் டி.ஆர். பாலு மற்றும் ஆ. ராசா ஆகி்யோர் பங்கேற்பார்கள் என்றும் தகவல் வெளியானது.

இது குறித்து நேற்று கருத்து தெரிவித்த டி.ஆர்.பாலு, ”பிரதமர் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க திமுகவுக்கு அழைப்பு வந்ததாக வெளியான செய்தி உண்மை அல்ல. திமுகவுக்கு எந்த அழைப்பும் வரவில்லை. குடியரசுத் தலைவரிடம் இருந்தோ, பிரதமரிடம் இருந்தோ அழைப்பு வரவில்லை” என்றார்.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல் ஹாசனுக்கும் பாஜக சார்பில் எந்த அழைப்பும் வரவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் திருப்பதி நாராயணன் தெரிவித்ததாவது: “மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க மக்கள் நீதி மய்ய தலைவர் கமலுக்கு அழைப்பு விடுத்ததாக செய்தி பரப்பியது யார்? அவ்வாறு அழைப்பு ஏதும் கமலுக்கு விடுக்கப்படவில்லை என்றார்.

மாநில முதல்வர்களுக்கு மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களுக்கு மட்டும் மோடி பதவி ஏற்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. நண்பர் என்ற முறையில் ரஜினிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும்,  இதனால்தான் திமுகவுக்கு அழைப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY