திமுகவில் இருந்து ஏன் வெளியேறுகிறார் விபி துரைசாமி?…

670
Spread the love

தமிழக தலைமைச் செயலாளர் சண்முகத்தை சந்தித்த திமுக எம்பிக்களில் ஒருவரான தயாநிதி மாறன் கூறிய சில கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக நாங்கள் தாழ்த்தப்பட்டவர்கள் போல் நடத்தப்பட்டோம் என்கிற அவரது பேச்சு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் திமுகவின் துணைப்பொதுச்செயலாளர் விபி துரைசாமி நேற்றைய தினம் பாஜ மாநிலத் தலைவர் முருகனை சந்தித்த தகவல் திமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பாஜகவின் டிவிட்டர் பக்கத்தில் பாஜ தலைவராக பதவி ஏற்று சிறப்பாக செயல்படும் முருகனுக்கு விபி துரைசாமி பாராட்டு தெரிவித்தார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கலைஞர் காலத்திலேயே துணைப்பொதுச்செயலாளரான விபி துரைசாமி ராஜ்ய சபா சீட்டு பெரும் எதிர்பார்த்து இருந்தார் ஆனால் அந்தியூர் செல்வராஜீக்கு சீட்டு வழங்கப்பட்டு விட்டது. மேலும் கட்சி மேலிடம் தனக்கு உரிய முக்கியத்துவம் தருவதில்லை என்கிற வருத்தம் நாமக்கல் மாவட்டத்துக்காரரான துரைசாமிக்கு சமீபகாலமாக இருந்து வந்தது. இந்த நிலையில் தயாநிதி மாறனின் பேச்சை ஸ்டாலின் கண்டிக்காதது துரைசாமிக்கு மிகவும் வருத்தத்தை கொடுத்துள்ளது. இதன் வெளிப்பாடு தான் முருகனுடனான சந்திப்பு என்கிறனர் அவரது ஆதவாளர்கள். 

LEAVE A REPLY