பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை….

42

திருவள்ளூர் மாவட்டம் சோழியம் பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் வினோத் இவரது மனைவி பவானி இவர்களது மகள் ஜீவிதா என்கிற ஜனனி கும்மிடிப்பூண்டியில் உள்ள கே. எல். கே பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு கடந்த சில தினங்களாக வயிற்று வலி இருந்துள்ளது. இந்த நிலையில் திடீரென வயிற்று வலி அதிகரித்ததன் காரணமாக மன விரக்தி அடைந்து வீட்டில் உள்ள பேனில் தனது துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.Thiruvalluur Suicide - Updatenews360 மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து கும்மிடிபூண்டி போலீசார் தகவலறிந்து வந்து ஜீவிதாவின் உடலை மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து தற்கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஊரடங்கு அமலில் உள்ள போது 9ம் வகுப்பு மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம்  கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY