திருச்சி GH மாடியிலிருந்து குதித்து இளைஞர் தற்கொலை

217

திருச்சி அருகேயுள்ள முடுக்குபட்டியைச் சேர்ந்தவர் கணேசமூர்த்தி (34). இவர்
கோவை தனியார் ஸ்பின்னிங் மில்லில் வேலை செய்து வந்தார்.  இவருக்கு கடந்த 10 நாட்களாக காய்ச்சல் இருந்து வந்தது. திருச்சி அரசு மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் இன்று காலை 8.45 மணி அளவில் ஆறு மாடி கொண்ட மருத்துவமனையின் மொட்டை மாடிக்கு கணேசமூர்த்தி சென்றார். அங்கிருந்து திடீரென கீழே குதித்தார். அவரை பணியாளர்கள் மீட்டு சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து மருத்துவமனை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY