சென்னை சவுகார்பேட்டையில் உள்ள ஒரு முக்கிய நகை பட்டறையினுள் புகுந்து ஒன்றரை கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி 3 பேரைக் கைது செய்துள்ளனர். ஆறுமுகம், லோகேஷ் மற்றும் ஹேமாராம் ஆகிய மூன்று நபர்களைக் கைது செய்த தனிப்படை போலீசார், அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகளையும் முழுமையாகப் பறிமுதல் செய்துள்ளனர்.
சவுகார்பேட்டை நகை பட்டறையில் புகுந்த மர்ம நபர்கள், அங்கிருந்த ஒன்றரை கிலோ தங்கம் மற்றும் மதிப்புமிக்க நகைகளைக் கொள்ளையடித்துத் தப்பினர். இது குறித்துப் பட்டறை உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் சென்னை போலீசார் உடனடியாக வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்தனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் ரகசியத் தகவல்களின் அடிப்படையில் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இதில் கொள்ளைச் சம்பவத்தில் நேரடியாகத் தொடர்புடைய ஆறுமுகம், லோகேஷ், ஹேமாராம் ஆகிய மூவரையும் போலீசார் சுற்றி வளைத்துக் கைது செய்தனர்.
