Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ரீல்ஸ் எடுத்த 14 வயது சிறுவன்.. மாடியில் இருந்து விழுந்து பலி

திருமலை: தெலங்கானா மாநிலம் ஐதராபாத் மல்லாபூர் பகுதியை சேர்ந்தவர் மிதுன் (14). இன்ஸ்டாகிராம், யூடியூப் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் ரீல்ஸ் போட்டு பிரபலம் அடைய வேண்டும் என நினைத்துள்ளார். இதற்காக கடந்த 5ம்தேதி, தனது நண்பர்களுடன் ஒரு உயரமான கட்டிடத்தின் பால்கனிக்கு சென்றார். அங்கிருந்து ஆபத்தான முறையில் சாகசங்களை செய்துள்ளார். இந்த சாகசத்தை, சக நண்பர்கள் வீடியோ எடுத்து கொண்டிருந்தார்களாம்.

அப்போது எதிர்பாராமல் மிதுன் தவறி கீழே விழுந்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மிதுன் இறந்தான். இதுதொடர்பான காட்சிகள் அருகிலுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருந்தது. அதனடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரீல்ஸ் மோகத்தில் சிறுவன் தவறி விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!