Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மின்சார வாரியத்தில் 15,000 புதிய பணியிடம் நிரப்பப்படும்

மின்சார வாரியத்தில் இந்த ஆண்டிற்குள் 15,000 புதிய பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார் அறிவிப்பு

தமிழக மின்சார வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவும், துறையை நவீனப்படுத்தி ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்யவும் தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக இந்த ஆண்டிற்குள் மின்சார வாரியத்தில் 15,000 புதிய பணியாளர்கள் அரசுப் பணியில் சேர்க்கப்படுவார்கள் என்று மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மின்சார வாரிய வரலாற்றில் முதல்முறையாக 300 உதவி பொறியாளர்களுக்கு செயற்குறியாளர்களாக பதவி உயர்வை வெளிப்படை தன்மையுடன் வழங்கிய எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமாருக்கு மின்வாரிய பொறியாளர்கள் சங்கம் சார்பில் பாராட்டு விழா இன்று சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மின்வாரியத்துறை அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார் , மின்வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

​ தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் நிர்மல் குமார், 300 பேருக்கு பதவி உயர்வு
​மின்சார வாரியத்தில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக உதவிப் பொறியாளர்களாகப் பணிபுரிந்து, பதவி உயர்வு கிடைக்காமல் சட்டப் போராட்டம் நடத்தி வந்த 300 ஊழியர்களுக்கு, உடனடியாகச் செயற்பொறியாளர்களாகப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் விஜய்யின் உத்தரவின் பேரில், ஊழியர்களின் நீண்டகாலப் கோரிக்கைகள் மற்றும் நிலுவையில் உள்ள பதவி உயர்வுகள் முன்னுரிமை அடிப்படையில் துரிதமாக வழங்கப்பட்டு வருகின்றன. இதேபோல் மற்ற பிரிவுகளிலும் நிலுவையில் உள்ள பதவி உயர்வுப் பணிகள் விரைந்து முடிக்கப்படும் என்றார் .


​மின்சார வாரியத்தில் தற்போது சுமார் 70,000 பணியாளர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. பணிச்சுமையைக் குறைக்கும் வகையில், முதற்கட்டமாக 15,000 பணியாளர்களைப் புதியதாக வேலைக்கு எடுப்பதற்கான வரைவு அறிக்கை (Proposal) தயாராகி வருகிறது. முதலமைச்சரின் ஒப்புதலுக்குப் பின், இந்த ஆண்டிலேயே இப்பணியிடங்கள் அனைத்தும் தற்காலிகப் பணியிடங்களாக இல்லாமல், முழுமையான அரசுப் பணியிடங்களாக நிரப்பப்படும். மேலும், கேங்மேன் (Gangman) பணியிடங்கள் தொடர்பான நிலுவை விவகாரங்களில் இன்னும் சில வாரங்களில் முறையான அறிவிப்பு வெளியாகும் எனக் கூறினார்.

​ ரூ.20,000 கோடி ஊழல் தடுப்பு
​கடந்த காலங்களில் டெண்டர் மதிப்பீடுகளில் (Estimation) பெரும் முறைகேடுகள் நடந்துள்ளன. உதாரணமாக, 600 கோடி ரூபாய் மதிப்புள்ள டெண்டரில் 397 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்து அரசுக்கு இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற 30% முதல் 35% வரையிலான நிதி கசிவைத் (Leakage) தடுக்க புதிய ‘டெண்டர் கொள்கை’ (Tendering Policy) உருவாக்கப்பட்டுள்ளது.​இனிமேல் சந்தை நிலவரம் மற்றும் உற்பத்தியாளர்களின் நேரடி விலையை அடிப்படையாகக் கொண்டு, 3 தனித்துவமிக்க குழுக்கள் (Committees) மூலமாக மட்டுமே டெண்டர் மதிப்பீடுகள் தயார் செய்யப்படும். அடுத்த வாரத்தில் இருந்து மின்சார வாரியம் மற்றும் அதன் அனைத்துப் பிரிவுகளிலும் இந்த புதிய முறை அமலுக்கு வருகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு 20,000 கோடி முதல் 30,000 கோடி ரூபாய் வரை அரசுக்கு மிச்சமாகும். முறைகேடு கண்டறியப்பட்ட முந்தைய டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டு, சி.பி.ஐ மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை (Vigilance) விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இடைத்தரகர்களுக்கு முற்றுப்புள்ளி
​சூரியசக்தி (Solar) மற்றும் காற்றாலை மின்சாரப் பயன்பாட்டுக்கான அனுமதிகளைப் பெறுவதில் கடந்த காலங்களில் இடைத்தரகர்கள் மூலம் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்து வந்தன. இதனை முற்றிலும் ஒழிக்க, புதிய வெளிப்படையான இணையதளம் (Website) இன்னும் சில நாட்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் நுகர்வோர்கள் மற்றும் சிறு உற்பத்தியாளர்கள் நேரடியாக ஆன்லைனில் விண்ணப்பித்து அனுமதி பெறலாம். மிடில்மேன் (Middlemen) கலாச்சாரம் முற்றிலும் ஒழிக்கப்படும் என்றார்.

​தமிழகத்தில் தற்போது மின்சாரத் தட்டுப்பாடு என்பது கிடையாது. உபரியாக உள்ள மின்சாரத்தை மத்திய தொகுப்பிற்கு விற்று மின்சார வாரியம் வருவாய் ஈட்டி வருகிறது.
​சென்னையில் நிலவும் லோ-வோல்டேஜ் மற்றும் மின்வெட்டுப் பிரச்சினைகளுக்கு, 20 ஆண்டுகளுக்கும் பழமையான டிரான்ஸ்ஃபார்மர்கள் மற்றும் கேபிள்கள் சேதமடைவதே காரணம். இவற்றைச் சரிசெய்ய கூடுதல் குழுக்கள் அமைக்கப்பட்டு 40 நிமிடங்களுக்குள் பழுதுகள் சரிசெய்யப்பட்டு வருகின்றன.
​மேலும், ஒரு சில பகுதிகளில் திட்டமிட்டே மின்சாரப் பெட்டிகளில் உள்ள ‘பியூஸ்’ (Fuse) பிடுங்கப்பட்டு மின்வெட்டு ஏற்படுத்தப்படுவது சிசிடிவி (CCTV) காட்சிகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இது போன்ற நாசவேலைகளில் ஈடுபடும் நபர்கள் மீது காவல்நிலையத்தில் கடுமையான புகார்கள் அளிக்கப்பட்டு, சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

error: Content is protected !!