சென்னை அருகே வண்டலூரில் குடியிருப்பு பகுதிக்குள் சுமார் 20 அடி நீளமுள்ள ராட்சத மலைப்பாம்பு புகுந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். வீடுகளுக்கு அருகிலுள்ள திறந்தவெளிப் பகுதியில் பாம்பு ஊர்ந்து செல்வதைப் பார்த்த மக்கள், உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த வனத்துறையின் மீட்புக் குழுவினர், நீண்ட போராட்டத்துக்குப் பிறகு பாம்பை காயமின்றி பிடித்தனர். பின்னர் அதன் உடல்நிலையைப் பரிசோதித்து, பாதுகாப்பாக அடர்ந்த வனப்பகுதியில் விடுவித்தனர்.
வண்டலூரில் குடியிருப்புக்குள் புகுந்த 20 அடி நீள மலைப்பாம்பு
