திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த பஸ்சில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர். சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் பயணம் செய்த 20க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். இந்த தகவலை அறிந்த போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். மேலும் இந்த விபத்தை குறித்து போலீஸ் விசாரணை செய்து வருகின்றனர்.
