Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

2019 கொலை வழக்கில் – 4 பேருக்கு ஆயுள் தண்டனை- அதிரடி

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில், கடலூர் நீதிமன்றம் தற்போது அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.
அருள் பாண்டியன் (2019-இல் கொலை செய்யப்பட்டார்). இக்கொலையை செய்த பாலாஜி, கவியரசன், ஆனந்த் மற்றும் அருண்குமார் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட இந்த 4 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2019-ஆம் ஆண்டு அருள் பாண்டியன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஸ்ரீமுஷ்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். கடலூர் நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணைகள் நிறைவடைந்த நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து இந்த 4 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!