Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஸ்ரீரங்கம் வாலிபர் கொலையில் 6 பேர் கைது- மேலும் 2 பேருக்கு வலை

திருச்சி பிரபல ரவுடி  திலீப்பின் ஆதரவாளர் , ஸ்ரீரங்கம் ரவுடி அன்பு (எ) அன்பரசன் ( 32) நேற்று காலை  இவர் ஸ்ரீரங்கத்தில் ஓட ஓட விரட்டி  வெட்டி கொலை செய்யப்பட்டார்.   பட்டப்பகலில்  ஒரு கும்பல் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டது.  கொலை செய்யப்பட்ட அன்பு மீதும் பல  வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட தினேஷ் பாபு, லோகேஷ், மகாபிரபு, அய்யனார், ரகு, கோபால கிருஷ்ணன் ஆகிய, 6 பேரை ஸ்ரீரங்கம் போலீசார் கைது செய்தனர்.  இந்த கொலை தொடர்பாக  ஸ்ரீரங்கம்   வடக்குவாசலை சேர்ந்த தீபக் ராகுல் உட்பட 2 பேரை போலீசார் வலைவீசி  தேடி வருகின்றனர்.

error: Content is protected !!