அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில், விஸ்கான்சின் டெல்ஸ் அருகே நேற்று காட்டுப் பகுதியில் ஒரு சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில், ஒரு குழந்தை உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கெனோஸாவில் இருந்து மெனோமோனி நோக்கிச் சென்றுகொண்டிருந்த 6 இருக்கைகள் கொண்ட ஒற்றை இன்ஜின் பைபர் பிஏ 46 விமானம், டெலோனா நகரின் அருகே இரவு 10 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியது. இடியுடன் கூடிய மழை காரணமாக வானிலை சீர்கேடு விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என விசாரணை நடைபெற்று வருகிறது.
அமெரிக்காவில் விமான விபத்தில் குழந்தை உட்பட 6 பேர் பலி
