வடமாநிலங்களில் அடுத்த 3 முதல் 4 நாட்களுக்குக் கனமழை தொடரும் என்பதால் டெல்லிக்கு இந்திய வானிலை மையம் ‘ஆரஞ்ச் அலர்ட்’ விடுத்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் கிழக்கு ராஜஸ்தான் மற்றும் மேற்கு மத்திய பிரதேசத்தில் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் பஞ்சாப், ஹரியானாவில் இன்றும் நாளையும் கனமழையும், பீகாரில் வரும் நாட்களில் பலத்த மழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
