Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

8.700 கிலோ குட்கா பறிமுதல் – திருச்சி ரயில்வே போலீஸ் அதிரடி

8.700 கிலோ குட்கா பறிமுதல் – திருச்சி ரயில்வே போலீஸ் அதிரடி

திருச்சி ரெயில்வே போலீசார் சிறப்பு ரோந்து அலுவலாக சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன், போலீசார் கண்ணதாசன், ரெங்கபாஷ்யம், ராஜ்குமார் ஆகியோர்
விழுப்புரம் ரெயில் நிலையத்தில் இருந்து திருச்சி வரை, ஹவுராவில் இருந்து திருச்சி வரை செல்லும் வண்டியில் , தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள கஞ்சா , குட்கா, போன்ற போதைப் பொருட்களை சோதனை செய்ததில் ஏசி பெட்டியில் ஒரு இருக்கைக்குக் அடியில் நீல நிற சாக்கு பை இருந்ததை சோதனை செய்ததில் அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா இருந்தன, அதை கொண்டு வந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த முஹமது சகாதத் ஹீசைன் என்பவரின் மகன்,முஹமது தவ்ஸ்ப் (வயது 29) என்பவரை விசாரனை செய்ததில் அவர் ஹவுராவிலிருந்து மதுரை கொண்டு செல்வதற்காக குட்காவை கடத்தி வந்தது தெரிய வந்தது

அதன் எடை 8.700 கிலோ கிராம் . பறிமுதல் செய்யப்பட்ட குட்கா மற்றும் முஹமது தவ்ஸ்ஃப் நிலையம் அழைத்து சென்று ஆஜர் படுத்தப்பட்டு உணவு பாதுகாப்பு அதிகாரி அன்புச்செல்வனிடம் ஒப்படைத்து பின்பு அவர்களால் ரூ.25,000அபராதம் விதிக்கப்பட்டது.

error: Content is protected !!