Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

போதை ஊசி செலுத்திக்கொண்ட மாணவன் மயங்கி விழுந்து சாவு….

சென்னை புளியந்தோப்பு பட்டாளம் கனகராய தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கஞ்சாமணி எனும் தீனதயாளன் (26). சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது புளியந்தோப்பு, ஐசிஎப், வடபழனி, பேசின் பிரிட்ஜ், உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு, அடிதடி, போதைப்பொருள் விற்பனை உட்பட 9 க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது.

கஞ்சாமணி எனும் தீனதயாளன்
போதைப் பழக்கத்திற்கு அடிமையான கஞ்சா மணி போதை ஊசி செலுத்திக் கொள்வதை வாடிக்கையாக கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு கஞ்சா மணி தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த சஞ்சய் (21), பிரபு(20) ஆகியோருடன் சேர்ந்து பட்டாளம் கனகராய தோட்டம் பகுதியில் உள்ள காலி மைதானத்தில் அமர்ந்து போதை ஊசியை உடலில் செலுத்தி கொண்டார்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த கஞ்சா மணி இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின் பேரில் புளியந்தோப்பு போலீஸாசார் கஞ்சா மணி உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து சஞ்சய் மற்றும் பிரபுவை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கெனவே சென்னையில் போதை ஊசி செலுத்தி 5க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில் தற்போது சரித்திர பதிவேடு குற்றவாளி ஓருவர் போதை ஊசி செலுத்திக் கொண்டதால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!