Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஜெயங்கொண்டம்…… விபசார விடுதி நடத்திய பெண் கைது

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் என்பவரது மனைவி சந்திரா (43). இவர் தனது வீட்டில் பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தி வருவதாக ஜெயங்கொண்டம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சந்திரா வீட்டிற்கு சென்று சோதனை செய்தபோது அங்கு உடையார்பாளையம் ,சிதம்பரம் ,இலையூர் பகுதியைச் சேர்ந்த மூன்று பெண்கள் விபசாரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது .

இதையடுத்து சந்திராவை கைது செய்து பாலியல் தொழில் ஈடுபட்ட மூன்று பெண்களையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்த போலிசார் அவர்கள் மீது வழக்குப் பதிந்து இதுபோன்ற செயல்களில் இனிமேல் ஈடுபடக்கூடாது என எச்சரித்து அவரது குடும்பத்தினருடன் அனுப்பி வைத்தனர்.மேலும் பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய சந்திரா மீது போலீசார் வழக்கு பதிவு கைது செய்து நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி  சிறையில் அடைத்தனர். மேலும் சந்திராவிடம் இருந்து 3100 ரொக்கமும், மது பாட்டில்கள், காண்டம் உள்ளிட்டவைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.  ஏற்கனவே சந்திரா மீது ஏற்கனவே மூன்று விபச்சார வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!