Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர்… மாரியம்மன் கோயிலில் வைகாசி திருவிழா…

கரூர் மாரியம்மன் கோயிலில் கம்பம் போடும் நிகழ்வுடன் தொடங்கிய நிகழ்ச்சி நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று வைகாசி திருவிழாவை முன்னிட்டு  மாரியம்மன் வெள்ளி சிம்ம வாகனத்திலும், மாவடி ராமசுவாமி சிம்மவாகனத்திலும் கோயிலில் இருந்து மேள தாளங்கள் முழங்க புறப்பட்டு முக்கிய வீதியில் வழியாக திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

அதைத் தொடர்ந்து சுவாமி திருவீதி உலா முக்கிய வீதிகள் வழியாக சென்ற பிறகு மீண்டும் கோயிலுக்கு வந்தடைந்த மாரியம்மன் மற்றும் மாவடி ராமசுவாமிக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டு திருவீதி உலா நிறைவு பெற்றது.

கரூர் தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு வெள்ளி சிம்ம வாகன திருவீதி உலா காட்சியைக் காண ஏராளமான பக்தர்கள்  காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!