Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர்…. மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சி….. மக்கள் திரளாக பங்கேற்பு

கரூர் மாவட்டம், கொக்கம்பட்டி கிராமத்தில் ஸ்ரீ பாலகேத்து, ஸ்ரீ பெத்தகேத்து  கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் மாடு மாலை தாண்டும் திருவிழாவையொட்டி கடந்த வாரம் காப்பு கட்டப்பட்டது. முதல் நாள் எருதுகுட்டை உள்ளிட்ட சாமிகளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாடு மாலை தாண்டும் திருவிழா நடைபெற்றது.

முதலில் கரூர், திருச்சி, திண்டுக்கல், உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வந்த 14 மந்தைகளுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து அழைத்து வரப்பட்ட அனைத்து மாடுகளுக்கும் புண்ணியதீர்த்தம் தெளிக்கப்பட்டு தாரை, தப்பட்டை முழங்க மந்தையில் இருந்து எல்லைசாமி கோவிலுக்கு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டன.

அங்கு எல்லைசாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மாடுகளுக்கு புண்ணிய தீர்த்தம் தெளிக்கப்பட்டது. இதையடுத்து அங்கிருந்து 600-க்கும் மேற்பட்ட மாடுகள் மந்தையில் உள்ள எல்லைக்கோட்டை நோக்கி சீறிப்பாய்ந்து ஓடியது. அப்போது அனைவரும் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். இதில், முதல் மற்றும் 2-வதாக ஓடி வந்த மாடுகளுக்கு சமூக வழக்கப்படி எலுமிச்சைப்பழம், கரும்பு பரிசாக வழங்கப்பட்டது.

இன்று நடைபெற்ற மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களும்  கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!