Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சை…போதையில் தவறி விழுந்து தொழிலாளி பலி

தஞ்சை விளார் சாலை அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (55). ரயில்வே குட்ஷெட்டில் லோடுமேனாக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று முன்தினம் வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி வரும் போது மது அருந்திவிட்டு புதுப்பட்டினம் ஊராட்சியில் உள்ள நாலுக்கண்ணி வாரி பாலக்கட்டையின் மீது உட்கார்ந்துள்ளார். அப்போது போதையில் நிலைதடுமாறிய அவர் பாலத்தில் இருந்து கீழே விழுந்தார்.

அப்பகுதியில் மழை நீர தேங்கி  சேறும் சகதியுமாக இருந்துள்ளது. இதில் விழுந்த ராஜேந்திரன் முகம் சேற்றில் சிக்கியுள்ளது. இதனால் சம்பவ இடத்திலேயே ராஜேந்திரன் உயிரிழந்தார். இது குறித்து ராஜேந்திரன் மகன் அழகரசன் கொடுத்த புகாரின் பேரில் தஞ்சை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!