Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மின் கட்டண உயர்வை கண்டித்து… அதிமுக மா.செ.சீனிவாசன் கண்டன ஆர்ப்பாட்டம்..

மின் கட்டணத்தை 3வது முறையாக உயர்த்திய திமுக அரசை கண்டித்தும் ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் வழங்காததை கண்டித்தும், திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்திற்கு திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார். அதிமுக செய்தி தொடர்பாளர் கல்யாணசுந்தரம், அமைப்பு செயலாளர் ரத்தினவேல், முன்னாள் ஆவின் சேர்மனும், ஜெயலலிதா பேரவை செயலாளருமான கார்த்திகேயன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்தும், நியாய விலைக் கடைகளில் பாமாயில் மற்றும் பருப்பு

வழங்கவில்லை என்றும் திமுக அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர்கள் கவுன்சிலர் அரவிந்தன், மாவட்ட இணைய செயலாளர் ஜாக்குலின், மாவட்ட துணை செயலாளர்கள் வனிதா, திருச்சி மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் ஜெயஸ்ரீ, ஐ.டி.பிரிவு வெங்கட் பிரபு, வக்கீல்கள் முல்லை சுரேஷ், சசிகுமார், எனர்ஜி அப்துல் ரஹ்மான், இன்ஜினியர் இப்ராம்ஷா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!