Skip to content

முதல்வர் ஸ்டாலின் ஆக.22ல் அமெரிக்கா பயணம்…..

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை திரட்ட தமிழக முதல்வர்   மு.க. ஸ்டாலின்,  வரும் ஆகஸ்ட் 22ம் தேதி   அமெரிக்கா செல்கிறார்.   அங்கு  பல்வேறு நிறுவனங்களின் செயல் அதிகாரிகளை சந்தித்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வரும்படி அழைப்பு விடுக்கிறார்.

முதல்வர்  அல்லது அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் வெளிநாடு செல்ல வேண்டும் என்றால் அதற்கு மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும். அதன்படி தமிழக முதல்வர்  ஸ்டாலின்  அடுத்த மாதம் அமெரிக்கா செல்ல  மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!