Skip to content

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையாரின் பிறந்தநாள்.. புதுகையில் கலெக்டர் இனிப்பு வழங்கல்..

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் அவர்களின் 139வது பிறந்த நாளினை முன்னிட்டு அவரது திருவுருவச்சிலைக்கு ஆட்சியர் மு.அருணா மாலை அணிவித்து , அவரது திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து அங்குள்ள மருத்துவர் மற்றும் மாணவர்களுக்கு
இனிப்பு களை வழங்கினார். உடன் சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பா.ஐஸ்வர்யா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்க. பிரேமலதா , அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் (பொ).மரு.ஜி.ஏ.ராஜ்மோகன், உள்ளாட்சி அமைப்புகளின்பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!