Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கேஸ் ரெகுலேட்டரில் தங்கம்.. திருச்சி ஏர்போர்ட்டில் சிக்கிய பயணி..

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு கோலாலம்பூரில் இருந்து வந்த ஏர் ஏசியா விமானத்தில் இருந்து வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு ஆண் பயணி கொண்டுவந்த உடைமைகளை சோதனை செய்ததில் அவர் கொண்டுவரப்பட்ட கேஸ் சிலிண்டர் ரெகுலேட்டரை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் வட்டவடிவிலான 300 கிராம் எடையுள்ள 6 தங்க துண்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அந்த பயணியிடம் இருந்து 53கிராம் எடையுள்ள இரண்டு தங்க செயின் மற்றும் இரண்டு மோதிரங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த பயணியிடமிருந்து மொத்தம் 353 கிராம் எடையுள்ள 27லட்சத்து 19ஆயிரத்து 575 ரூபாய் மதிப்பிலான தங்கம் என மதிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து அந்த பயணியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!