Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி….. புதுகையில் நடந்தது

இந்தியா முழுவதும் இன்று குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் சார்பில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம்,  தேசிய குழந்தைகள் தினம், நவம்பர்-19 உலக குழந்தை துன்புறுத்தல் பாதுகாப்பு தினம் மற்றும் நவம்பர்-20 சர்வதேச குழந்தைகள் தினத்தை முன்னிட்டு  விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதனை  மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா,  இன்று (14.11.2024) துவக்கி வைத்து, குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறித்த அரண் புத்தகம் 1  வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சியில்  மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ.ராஜராஜன் அவர்கள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது).முருகேசன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர்  கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!