Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர் அருகே விபத்து…. .டிபார்ட்மெண்ட் ஸ்டோர் உரிமையாளர் பலி…

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் பகுதியில் டிபார்ட்மெண்டல் ஸ்டோர் நடத்தி வரும் மகேஷ் குமார் (38) என்பவர் வேலாயுதம்பாளையம் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு செல்லும் போது கரூர் சேலம் பைபாஸ் சாலையில்
நாணப்பரப்பு பிரிவு சாலை அருகே வந்த போது சிறுநீர் கழிப்பதற்காக தனது காரை தேசிய நெடுஞ்சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு காரின் பின் பகுதியில் நின்றிருந்த போது பின்னால் வந்த டாரஸ் லாரி எதிர்பாராத விதமாக மகேஷ் குமார் மீதும் காரின் மீதும் மோதியது இதில் பலத்த காயம் அடைந்த மகேஷ் குமாரை அருகில் இருந்தவர்கள்

ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அப்போது மகேஷ் குமாரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினார். இதனை அடுத்து மகேஷ்குமார் உடல் வேலாயுதம் பாளையம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பாக வேலாயுதம் பாளையம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்தின் காணரனமாக கரூர் சேலம் தேசிய தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!