Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கீழ்ப்பாக்கம் ஜிஎச்-ல் பெண்ணிற்கு பாலியல் தொல்லை… இளைஞர் கைது

சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் நாள்தோறும் நூற்றுகணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இதோபோல் ஒரு சிலர் உள்நோயாளியாக தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை மகளிர் பிரிவில் 50 வயதான பெண் ஒருவர் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், திடீரென அந்த பெண் தங்கி இருந்த அறைக்குள் புகுந்த அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் மது போதையில் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண் உடனடியாக கத்தி கூச்சலிட்ட நிலையில், அங்கு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் அந்த இளைஞரை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து அந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். சிகிச்சைக்காக வந்த 50 வயது பெண்ணுக்கு மதுபோதையில் இளைஞர் பாலியல் தொல்லை அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
error: Content is protected !!