Skip to content

நெல்லை மனோன்மணியம் பல்கலைக்கழக தேர்வு ஒத்திவைப்பு

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இன்று நடக்கவிருந்த ‘இன்டஸ்ட்ரியல் லா’ தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தென்மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற பல்கலைக்கழகம் ஆகும். இந்த பல்கலைக்கழகத்தின் கீழ் 106 கல்லூரிகள் இயங்கி வருகின்றன. தற்போது மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பருவ தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இன்று பல்கலைக்கழகத்திற்குட்பட்ட கல்லூரிகளில் ‘இன்டஸ்ட்ரியல் லா’ தேர்வு நடைபெற இருந்தது. இந்த நிலையில், ‘இன்டஸ்ட்ரியல் லா’ தேர்வின் வினாத்தாள் கசிந்ததாக வந்த தகவல் வெளியானது. இதனையடுத்து நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இன்று நடக்கவிருந்த ‘இன்டஸ்ட்ரியல் லா’ தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 106 கல்லூரிகளிலும் ‘இன்டஸ்ட்ரியல் லா’ பாடத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!