Skip to content

டெல்லியை முடக்கிய கடும் பனிமூட்டம்…228 விமான சேவைகள் ரத்து

டெல்லியில் அடர்ந்த பனிமூட்டம் நிலவுவதால் விமானப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில், குறைந்த வெளிச்சம் காரணமாக விமான சேவைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டன.

டெல்லியில் பனி அடர்ந்த சூழலால், தெளிவற்ற வானிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக டெல்லி விமான நிலையத்தில், 131 விமானங்களின் புறப்பாடு மற்றும் 97 விமானங்களின் வருகை என மொத்தம் ஏர் இந்தியா, இண்டிகோ உள்ளிட்ட பல்வேறு விமான நிறுவனங்களின் 228 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இவற்றில் ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் 40-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன என உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. இதுதவிர 5 விமானங்கள் அருகேயுள்ள விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் டெல்லியில் பல்வேறு பகுதிகளிலும் பனிப்போர்வை போர்த்தியது போல் காட்சி அளிக்கிறது. இதனால் காலையிலேயே வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே செல்லும் நிலை உருவாகியுள்ளது. மேலும் பல பகுதிகளிலும் காலையிலேயே பனி மூட்டமும் அதிகரித்துள்ளது.

error: Content is protected !!