திருச்சி நவலூர் குட்டப்பட்டு ராம்ஜி நகர் வடக்கு தெருவை சேர்ந்தவர் பூமி பாலன் (28). இவர் கடந்த நவம்பர் மாதம் 24ஆம் தேதி தனது இரு சக்கர வாகனத்தை தென்னூர் அருகே நிறுத்திவிட்டு சென்றார். சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்தபோது இரு சக்கர வாகனம் திருடு போனது தெரியவந்தது. இதேபோல் திருச்சி உறையூர் கல்லறை மேட்டு தெருவை சேர்ந்தவர் வள்ளி (38). இவர் கடந்த 12ஆம் தேதி தன் இருசக்கர வாகனத்தை தன் வீட்டின் அருகே நிறுத்திவிட்டு சென்றார் சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்தபோது அந்த இடத்திலிருந்து இருசக்கர வாகனம் திருடு போனது தெரிய வந்தது. இது குறித்து திருச்சி மாநகர போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் உறையூர் போலீசார் உறையூர் நோவா காலனி ஆர் எஸ் புரத்தை சேர்ந்த சேர்ந்த அருண்குமார் (21) என்ற வாலிபரையும் அவரது கூட்டாளியான விஜயகுமார் (50) என்பவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து திருடு போன இரண்டு இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

