2025ம் ஆண்டு முழுவதும் ஆர்பிஐ ரெப்போ விகிதத்தை படிப்படியாக குறைத்து வந்தது. டிசம்பர் 2025இல் 25 அடிப்படை புள்ளிகள் (0.25%) குறைத்து 5.25 சதவீதம் வரையில் கொண்டு வந்தது ஆர்பிஐ.
ரெப்போ விகிதம் என்பது வங்கிகள் ஆர்பிஐயிடம் கடன் வாங்கும் வட்டி விகிதம். இது குறைந்தால் நாம் வாங்கும் வீடு, கார், கல்வி கடன்களின் வட்டி விகிதமும் குறையும்.
ரெப்போ விகிதம் மாற்றமின்றி இருந்தால் வங்கி கடன் வட்டி விகிதங்கள் உயராமல் இருக்கும். வீடு, கார், கல்வி கடன் வட்டி நிலையாக இருக்கும்.
இந்நிலையில், வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய காலக் கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை. 5.25%-ஆக நீடிக்கிறது!
பணவீக்கம் அதிகரிக்க தொடங்கியதால் வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை என ரிசர்வ் வங்கி தெரிவிப்பு!
ரிசர்வ் வங்கியின் 3 நாள் நிர்வாகக் குழு கூட்டத்துக்கு பிறகு கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா செய்தியாளர் சந்திப்பில் இதை தெரிவித்தார்.

