Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தவெக-வில் நிலவும் சுணக்கம்: ‘ஜனநாயகன்’ படம் தள்ளிப்போனதால் தொண்டர்கள் அதிருப்தி

கோயம்புத்தூர் மாவட்டத்தில் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் போன்ற பிரதான கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளன. ஆனால், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தினர் எந்தவித தேர்தல் பணிகளும் செய்யாமல் ஒதுங்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாகும் என்றும், அதன் மூலம் கட்சிக்கு ஒரு பெரிய எழுச்சி கிடைக்கும் என்றும் தொண்டர்கள் ஆவலோடு காத்திருந்தனர். ஆனால், படம் ரிலீஸ் ஆகாததால் கட்சி பணிகளில் ஒருவித தொய்வு ஏற்பட்டுள்ளது. ஒருவேளை படம் வெளியாகியிருந்தால், ரசிகர்கள் உற்சாகத்துடன் தேர்தல் வேலைகளைக் கவனித்திருப்பார்கள் என்று நிர்வாகிகள் கருதுகின்றனர்.

இது ஒருபுறமிருக்க, மாநிலத் தலைமையிடமிருந்து மாவட்ட நிர்வாகிகளுக்கு முறையான வழிகாட்டுதல்கள் எதுவும் வரவில்லை என்றும் புகார் எழுந்துள்ளது. தேர்தல் நெருங்கி வரும் சூழலில், பூத் கமிட்டி கூட்டம், மண்டல அளவிலான ஆலோசனைக் கூட்டங்கள் என அடிப்படைப் பணிகள் கூட இன்னும் தொடங்கப்படவில்லை. இதனால், “இப்படி இருந்தால் எப்படி தேர்தலைச் சந்திப்பது?” என்று தவெக நிர்வாகிகள் சலிப்புடன் பேசி வருகின்றனர்.

error: Content is protected !!