Skip to content

தூர்தர்ஷன் செய்தி வாசிப்பாளர் சரளா மகேஸ்வரி காலமானார்

இந்தியாவின் முன்னணி செய்தி நிறுவனமான தூர்தர்ஷனில் செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றி மிகவும் பிரபலமானவர் சரளா மகேஸ்வரி.
செய்தி வாசிப்பாளர் மட்டுமின்றி எழுத்தாளர், கவிஞர் மற்றும் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் என பன்முகங்களைக் கொண்டவர் சரளா மகேஸ்வரி. மேற்கு வங்கத்தில் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். சுமார் 16 புத்தகங்களை எழுதியுள்ளார். இந்நிலையில் 71 வயதான அவர் இன்று டெல்லியில் காலமானதாக கூறப்படுகிறது. அவரது மறைவிற்கு தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிறுவனம் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!