Skip to content

முன்னோடி திட்டங்களை திராவிட மாடல் அரசு நிறைவேற்றுகிறது- லால்குடியில் உதயநிதி பேச்சு

திருச்சி மாவட்டம் லால்குடியில் புதிய பேருந்து நிலையம் மற்றும் நகராட்சி அலுவலகத்தை இன்று
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்து பேசியதாவது:-

திருச்சி மாவட்டத்திற்கும், விசேஷமாக லால்குடி தொகுதிக்கும் வருவதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
முன்னாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கம், இன்றைய நகராட்சி துறை அமைச்சர் கே என் நேரு ஆகியோரை தந்த ஊர் லால்குடி.
இன்னைக்கு நம்ம பள்ளி கல்வித்துறை அமைச்சர், அன்பில் மகேஷ் அவர்களோட தொகுதி இது. இந்த தொகுதி மக்கள் மேல அவர்கள் எவ்வளவு அக்கறை வச்சிருக்காருன்னு நம்ம எல்லாருக்குமே தெரியும்.
நம்ம முதல்வர் அவர்களோட திட்டப்படி, ‘மக்களுடன் முதல்வர்’ திட்டம் இந்தப் பகுதியில் மிகச் சிறப்பாக நடந்து வருகிறது. லால்குடி மக்களின் பல கால கோரிக்கைகளை இந்த அரசு கவனித்து வருகிறது.
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், இந்த லால்குடி தொகுதியில் இருக்கிற தகுதியான பயனாளிகள் அனைவருக்கும் விரைவில் புதிய வீடுகள் கட்டித் தரப்படும்.
நம்ம திராவிட மாடல் அரசு, எப்பவுமே மக்கள் பக்கம்தான் இருக்கும். உங்களோட அன்பும் துணையும் எப்பவுமே எங்களுக்கு இருக்கணும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

தி.மு.க.வுக்கு முன்னாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கத்தை தந்த ஊர் லால்குடி. அதன் பின்னர் அமைச்சர் கே என் நேருவை தந்த ஊர் இந்த ஊர். திருச்சி மாவட்டத்தில் உள்ள அமைச்சர் கே என் நேரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகிய இரண்டு அமைச்சர்களும் இந்த மாவட்டத்தின் வளர்ச்சிக்கு முதல்வரிடம் எடுத்துக் கூறி பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தி உள்ளனர்.
அதேபோன்று இந்த தொகுதியின் எம்எல்ஏ சவுந்தர பாண்டியனும் இந்த மக்களுக்காக கடினமாக உழைத்து வருகிறார். பஞ்சப்பூரில் மிகப்பெரிய பேருந்து நிலையத்தை கட்டியவர் அமைச்சர் கே என் நேரு.
தற்போது சொந்த ஊரையும் விட்டு விடாமல் இந்த மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று அது நவீன பஸ் நிலையத்தை கொண்டு வந்துள்ளார். இங்குள்ள காமராஜர் பேருந்து நிலையம் நகர பஸ்கள் நிற்கும் வசதி மட்டுமே உள்ளது புறநகர் பேரு

ந்துகள் வந்து செல்ல வசதி இல்லை அதே போன்று லால்குடி மேம்பாலம் கட்டப்பட்ட பின்னர் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது அவற்றுக்கெல்லாம் இன்றைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும், தமிழக முதலமைச்சரின் திராவிட மாடல் அரசு அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றி வருகிறது.
இந்த ஆட்சியில் மகளிர் விடியல் பயணம் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் புதுமைப்பெண் திட்டம் நான் முதல்வன் திட்டம் போன்ற பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன பத்து லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திராவிட மாடல் ஆட்சியை இன்னைக்கு நாடே திரும்பிப் பார்க்கிறது.
தமிழ்நாட்டில் ஒரு கோடியே 31 லட்சம் மகளிருக்கு மாதம்தோறும் ரூபாய் ஆயிரம் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது சட்டமன்றத் தேர்தலை காரணமாக வைத்து இதை நிறுத்தி விடலாம் என முயன்றனர் ஆனால் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆயிரம் அல்ல ஐயாயிரம் கொடுப்பேன் என்று பிப்ரவரி, மார்ச் ஏப்ரல், ஆகிய மூன்று மாதங்களுக்கு உண்டான மகளிர் உரிமைத் தொகை ரூபாய் 3000 மற்றும் கோடைகால சிறப்பு தொகை 2000 என சேர்த்து வழங்கியுள்ளார் மீண்டும் 2.0 திராவிட மாடல் அரசு அமைந்ததும் ரூபாய் 2000 ஆக மகளிர் உரிமைத் தொகையை உயர்த்தி வழங்குவதாக தெரிவித்துள்ளார். முதலமைச்சர் சொன்னதை செய்வார் என்ற நம்பிக்கை உங்களுக்கு உள்ளது.
தமிழக மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர் மகளிர் உரிமை திட்டத்தால் பெண்கள் கூடுதல் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் ஆனால் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை முடக்க நினைத்தவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
லால்குடி பகுதியில் குறிப்பாக லால்குடி மற்றும் புள்ளம்பாடி கிராமங்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க ரூபாய் 250 கோடியில் கூட்டு குடிநீர் திட்டம் லால்குடி அரசு மருத்துவமனையில் ரூபாய் 53 கோடி செலவில் 12 அறைகள் கொண்ட புதிய கட்டிடம் ரூபாய் 5 கோடியில் வட்டாட்சியர் அலுவலகம்,
கால்நடைத்துறை சார்பாக ரூபாய் மூன்று கோடியில் கால்நடை மருந்தகம் லால்குடி அரசு மருத்துவமனையில் மேலும் ரூபாய் எட்டு கோடி செலவில் 50 படுக்கை வசதிகள் கொண்ட புதிய கட்டிடம் சார் பதிவாளர் கட்டிடம் இந்த தொகுதியில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளையும் மேம்படுத்த 8கோடி செலவில் புதிய திட்டப் பணிகள் என பல திட்டங்களை திராவிட மாடல் அரசு நிறைவேற்றி வருகிறது. இன்றைக்கு நாட்டின் முன்னோடி திட்டங்களை திராவிட மாடல் அரசு நிறைவேற்றி வருகிறது.
இந்த புதிய பஸ் நிலையத்தை சுத்தமாக சுகாதாரமாக பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நம்ம திராவிட மாடல் அரசு, எப்பவுமே மக்கள் பக்கம்தான் இருக்கும். உங்களோட அன்பும் துணையும் எப்பவுமே எங்களுக்கு இருக்கணும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

error: Content is protected !!