Skip to content

திருவண்ணாமலையில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்

நடிகர் சிவகார்த்திகேயன் இன்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். பிறந்தநாளை முன்னிட்டு இன்று காலை, குடும்பத்துடன் அண்ணாமலையார் கோவில் சென்று சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து, பிரசாதம் வழங்கப்பட்டது.

error: Content is protected !!