கரூரில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியில் 200 க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு பங்கேற்றனர்.
கரூர் மாவட்டம் மதுவிலக்கு அமலாக்கத் துறை மற்றும் மாவட்ட காவல் துறை சார்பில் சர்வதேச போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு தினத்தையொட்டி நடைபெ

ற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் விமல்ராஜ் தொடங்கி வைத்தார்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து தொடங்கிய இந்த பேரணி முக்கிய சாலை வழியாக வழியாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நிறைவடைந்தது.
பேரணியில் கலந்து கொண்ட 200 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் போதை பொரு

ளுக்கு எதிரான விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்திச் சென்றனர்.
தொடர்ந்து பேரணி நிறைவில் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதி மொழியை மாணவ, மாணவிகள், காவல் துறையினர், அரசு அலுவலர்கள் ஏற்றனர்.

