மூதாட்டி மயங்கி விழுந்து சாவு
திருச்சி பாலக்கரை செங்குளம் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஞானம் இவரது மனைவி ஷேக் (வயது 64). இவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு சென்றார். பின்னர் மருந்து மாத்திரைகள் வாங்கிக் கொண்டு, வீடு திரும்பிய அவர் திடீரென வீட்டின் முன்பு மயங்கி விழுந்தார்.
உடனே உறவினர்கள் அவரை மீட்டு மீண்டும் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கே டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். அங்கு அவர்
சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது மகள் ஈஸ்வரி கொடுத்த புகார் அடிப்படையில் பாலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரு
குட்கா புகையிலை வழக்கில் 2 பேர் கைது
திருச்சி பெரிய மிளகு பாறை காந்தி தெருவில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக செசன்ஸ் கோர்ட் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தினார். அதில் மிளகு பாறை வேட்டுவத் தெரு பகுதியைச் சேர்ந்த செல்ல பாண்டியன் )வயது38 )என்பவர் ஹான்ஸ் புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது அதை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து புகையிலைப் பொருட்களை கைப்பற்றினர். இதேபோன்று
திருச்சி எடமலைப்பட்டி புதூர் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த கர்ணன்) 47 )என்பவரை புகையிலை வழக்கில் எடமலைப்பட்டி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஞானகுமார் கைது செய்தார் அவரிடம் இருந்து 100 கிராம்
ஹான்ஸ் புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டது.
தொழிலாளியை மிரட்டி பணம் பறிப்பு
திருச்சி உறையூர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 52) இவர் சிங்காரத்தோப்பு நூலகம் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை இரண்டு வாலிபர்கள் வழிமறித்து மிரட்டி ரூ 400 பணத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து ஓடிவிட்டனர். இது தொடர்பாக சுரேஷ் கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் சுற்றித்திரிந்த உறையூர் செல்லாண்டி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஹரி சூர்யா (வயது 23) சோலை நகர் பீர்முகமது ( 20)ஆகிய இரண்டு பேரை கைது செய்து அவரிகளிடமிருந்து ரூ 400 பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

