Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருமணம் முடிந்து திரும்பியபோது சோகம்: கார் விபத்தில் குழந்தை உட்பட 5 பேர் பலி

ராஜஸ்தானின் பாலி மாவட்டத்தில் வசித்து வந்த ஒரு குடும்பத்தினர் குஜராத்தின் ஆமதாபாத் நகரில் குடிபெயர்ந்து உள்ளனர். இந்த நிலையில் அந்த குடும்பத்தினர் ராஜஸ்தானில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றுக்கு காரில் புறப்பட்டு சென்றனர்.
இதன்பின்னர் திருமண விழாவில் பங்கேற்று விட்டு ரமோல் பகுதிக்கு காரில் இன்று திரும்பி கொண்டிருந்தனர். அப்போது அந்த கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடி, சாலை பிரிப்பானின் மீது மோதி விபத்தில் சிக்கியது.

இதில் கார் உருக்குலைந்து போனது. காரில் பயணித்தவர்களில் ஒரு குழந்தை உள்பட 4 பேர் சம்பவ பகுதியிலேயே உயிரிழந்தனர். மற்றொரு மூதாட்டி சிகிச்சை பலனின்றி பலியானார். இதனால், மொத்தம் 5 பேர் விபத்தில் பலியாகி உள்ளனர். கார் ஓட்டுநர் உள்பட 6 பேர் தீவிர காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

error: Content is protected !!