Skip to content

உலகின் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் தலைவன் சுட்டுக்கொலை

மெக்சிகோவில் உலகின் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் தலைவன் எல் மென்ச்சோ சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். மிக ஆபத்தான போதைப்பொருள் கடத்தல் கும்பல்களில் ஒன்றான CJNG அமைப்பின் தலைவன் ராணுவப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதால் மெக்சிகோவில் வன்முறை வெடித்துள்ளது. அமெரிக்காவால் $15 மில்லியன் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்த மிக முக்கியமான குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.

உயர்மட்டத் தலைவன் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, ஆயுதமேந்திய குழுக்கள் பல்வேறு மாநிலங்களில் மோதலில் ஈடுபட்டு வருவதால் அந்நாட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பாதுகாப்பு படையினர் வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்தி வருகின்றனர். மெக்சிகோவில் அதிபர் கிளாடியா ஷீன்பாம் பொதுமக்கள் அமைதிக்காக வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்கிடையே வன்முறை காரணமாக அமெரிக்க தூதரகம் தமது குடிமக்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், ஏர் கனடா, அமெரிக்கா விமான நிறுவனங்கள் மெக்சிகோவுக்கு விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளனர்.

error: Content is protected !!