Skip to content

திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 2 தொகுதிகள்

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் முக ஸ்டாலின் – காதர் மொகிதீன் முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளது.சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. ஆளும் திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது.தி.மு.க. பேச்சுவார்த்தை குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையிலான பேச்சுவார்த்தை குழுவினருடன் தொகுதி பங்கீடு குறித்து காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. அந்த வகையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.

இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் – காதர் மொகிதீன் முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளது. 2021 ஆம் தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி க்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், வரும் தேர்தலில் 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த தேர்தலில் வாணியம்பாடி, சிதம்பரம், கடையநல்லூர் தொகுதிகளில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி போட்டியிட்டது. புதுவையில் ஒரு தொகுதி ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளதாக காதர் மொகிதின் கூறியுள்ளார். மேலும் ஏணி சின்னத்திலேயே போட்டியிடப்போவதாக தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!