Skip to content

திருச்சியில் தடைசெய்யப்பட்ட புகையிலை மற்றும் கஞ்சா விற்பனை: 4 பேர் கைது

திருச்சியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் மற்றும் கஞ்சா விற்பனை செய்ததாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருச்சி கண்டோன்மென்ட் அரிஸ்டோ ரவுண்டானா அருகே புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த கே.கே. நகரைச் சேர்ந்த பிரசாத் (43) என்பவரை கண்டோன்மென்ட் போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 120 கிராம் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல், செசன்ஸ் கோர்ட் போலீசார் நடத்திய சோதனையில், எம்.ஜி.ஆர் சிலை அருகே புகையிலைப் பொருட்கள் விற்ற பொன்மலைப்பட்டியைச் சேர்ந்த கணேசன் (40), பொன் நகர் பகுதியில் கஞ்சா விற்ற கோரிமேடு பகுதியைச் சேர்ந்த குமார் (29) மற்றும் முருகன் (29) ஆகிய மூன்று பேரைக் கைது செய்தனர். இவர்களிடமிருந்து மொத்தம் 180 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட நான்கு பேரும் பின்னர் போலீசாரால் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.

error: Content is protected !!