Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ராஜ்யசபா சீட்டு கான்ஸ்டன்டைன் ரவீந்திரனுக்கு எப்படி?

தமிழ்நாட்டில் காலியாக இருக்கும் 6 நாடாளுமன்ற மாநிலங்களைவை இடங்களுக்கான வேட்பாளர்களை திமுகவு அதிமுகவும் அறிவித்து விட்டன. திமுக தன்னிடம் இருக்கும் 4 இடங்களில் 2 இடங்களைக் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸுக்கும்,தேமுதிகவுக்கு தலா ஒரு இடங்களாக பிரித்து வழங்கிவிட்டது.

மீதமுள்ள இரண்டு இடங்களில் திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான திருச்சி சிவாக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. மற்றொரு இடத்திற்கு யாரும் எதிர்பார்க்காத வகையில் திமுகவின் செய்தி தொடர்புச் செயலாளரான கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார். கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் அறிவிக்கப்பட்டதற்கு பின்னால் போதிய அரசியல் பிரதிநிதித்துவம் கிடைக்காமல் இருக்கும் மீனவர் மற்றும் கிறிஸ்த்தவர் சமுதாயத்தைச் சார்ந்த பிரதிநிதி ஒருவர் கட்டாயம் இருக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட கண்டிசன்தான் காரணம் என தகவல்கள் கிடைத்துள்ளன. பொதுவாகவே திமுகவின் மாநிலங்களைவை உறுப்பினர்கள் தேர்வில் சமூகநீதி முக்கிய அளவுகோலாக கொள்ளப்படுகிறது, கடந்தக் காலங்களிலும் சிறுபான்மையினர் மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட சமூகங்களின் பிரதிநிதிகளை திமுக நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுத்து அனுப்பியுள்ளது.

அதே அணுகுமுறையையே பேராசிரியர். கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் அவர்களது தேர்விலும் பின்பற்றியிருக்கிறது திமுக.மீனவர் மற்றும் கிறிஸ்த்தவர் சமுதாய மக்களின் பிரதிநிதித்துவத்தை நாடாளுமன்றத்தில் எதிரொலிக்கும் வகையில் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சிறுபான்மையினர் நலனிலும் அவர்களது அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்திவதிலும் அக்கறைக் காட்டிவரும் முதலமைச்சர் ஸ்டாலின் இந்த சிறப்பான முடிவை எடுத்துள்ளார் என அறிவாலய வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் திருநெல்வேலி மாவட்டம், கூத்தன்குழி கிராமத்தில் 967-ஆம் ஆண்டு பிறந்தவர்.தந்தை மற்றும் தாய் இருவரும் ஆசிரியர்கள் என்பதால், சிறுவயதிலேயே கல்விச் சூழலில் வளர்ந்தவர்.பொறியியல் (M.E), கணினிப் பயன்பாட்டியல் (M.C.A), மேலாண்மை (M.B.A), சட்டம் (M.L) மற்றும் முனைவர் பட்டம் (Ph.D) என ஐந்து வெவ்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்.வெறும் அரசியல்வாதியாக மட்டுமல்லாமல், 20 ஆண்டுகால பேராசிரியப் பணியின் மூலம் கல்வியாளராக இருந்தவர் திமுகவின் செய்தித் தொடர்பு செயலாளராக, தொலைக்காட்சிகளிலும் மேடைகளிலும் கட்சியின் கொள்கைகளைத் பொறுமையுடன் தர்க்கரீதியாக முன்வைப்பவர் என அவருடைய பல ப்ளஸ்கள் அவரது தேர்வுக்கு காரணமாகியிருக்கின்றன இவர் மாநிலங்களவைக்கு செல்வதன் மூலம் குரலற்று இருக்கும் மீனவர்களின் பிரச்சனைகளை அழுத்தமாக பதிவு செய்வார் என்று திமுக உறுதியாக நம்புகிறது. அண்மைக் காலங்களில் தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் தாக்கப்படுவதும், கைது செய்ப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது. அவர்களின் குரலாக கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஒலிப்பார் என கருதப்படுகிறது.

error: Content is protected !!