Skip to content

அவங்கள வெளியே கூட்டிட்டு போறீங்க-விஜய்யை விளாசிய சமுத்திரகனி

*இது என்ன விளையாட்டா? இவ்வளவு விஷயங்கள் நடந்திருக்கிறது. அவங்களை வெளியே கூட்டிட்டு போறீங்க எதுவா இருந்தாலும் நான்கு சுவற்றுக்குள்ள வைத்துக்கொள்ள வேண்டியதுதானே? யாரை நீ பழி வாங்குற? என விஜயை விமர்சித்து பேசிய நடிகரும் இயக்குனருமான சமுத்திரக்கனியின் வீடியோ வைரலாகிவருகிறது.

சமீபத்தில் தயாரிப்பாளர் கல்பாத்தி சுரேஷ் குடும்பத்தில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜயும், நடிகை த்ரிஷாவும் ஜோடியாக வந்தது பேசுபொருளாக மாறியது. இந்த நிலையில் சமீபத்தில் சென்னை எம்ஆர்சி நகரில் நடைபெற்ற ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புதிதாக இயக்கக்கூடிய Texla திரைப்படத்தின் பூஜை நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் பாலா, நடிகர் சமுத்திரக்கனி ,சீமான், இயக்குனர் ஆர் வி உதயகுமார் உள்ளிட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சி முடிந்தபின்னர் இயக்குனர் பாலா, நடிகர் சமுத்திரக்கனி ,சீமான், இயக்குனர் ஆர் வி உதயகுமார் உள்ளிட்டோர் ஒன்றாக பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது ஆதங்கத்துடன் விஜய்யை விமர்சித்து காட்டமாக பேசிய நடிகர் சமுத்திரகனி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், விஜய் திரிஷா ஒன்றாக கல்யாண நிகழ்ச்சியில் கலந்து கொண்டது பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது. அதில் சமுத்திரக்கனி இது என்ன விளையாட்டா? இவ்வளவு விஷயங்கள் நடந்திருக்கிறது. அவங்களை வெளியே கூட்டிட்டு போறீங்க…. எதுவா இருந்தாலும் நான்கு சுவற்றுக்குள்ள வைத்துக்கொள்ள வேண்டியதுதானே? யாரை நீ பழி வாங்குற? எல்லாம் நல்லபடியாக வந்துகொண்டிருந்தது. கட்சிக்காரனே இனிமேல் நம்மால் முடியாது என்று சொல்கிறான் என்று அவர் வருத்தமாக கூறியிருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

error: Content is protected !!