திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம்.அன்று பொதுமக்கள் வந்து கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனுக்களை அளிப்பார்கள்.மனுவின்படி அதிகாரிகள் விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பார்கள்.
நேற்று மாலை தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.இதனால் இன்று வரும் மக்கள் மனுக்களை கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பெட்டிக்குள் போட்டுவிட்டு சென்றனர்.அப்போது திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு சிறுமி ஒருவருடன் கணவன், மனைவி வந்தனர்.அவர்கள் திடீரென தங்களின் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி காப்பாற்றினர்.
இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.இதைத்தொடர்ந்து அவர்களை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.அதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

