Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

உதயமாகிறதா?… ”அய்யா பாமக” புதிய கட்சி…

பாமகவில் தந்தை மகன் இடையே ஏற்பட்ட பூசலால் பாமக கட்சியினுள் பிரச்சனை வெடிக்க தொடங்கியது. குடும்ப பிரச்சினை இறுதியில் கட்சியை இரண்டு துண்டுகளாக பிரிக்கும் அளவிற்கு சென்று விட்டது. மேலும் பாமக உடைந்து இரண்டு துண்டுகளாக பிரிந்துவிட்டது. அன்புமணி தரப்பு பாமக ராமதாஸ் தரப்பு பாமக என இரண்டாகப் பிரிந்ததில் அன்புமணி தரப் பாமக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்கவிருக்கிறது. 

இதற்கிடையில் அரசியலில் தனித்து விடப்பட்ட பாமக நிறுவனர் ராமதாஸ் வி.கே சசிகலாவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க போவதாக அறிவித்திருந்தார். இப்படிப்பட்ட ஒரு சூழலில்தான் இன்றைய தினம் பதிவு செய்யப்பட்ட அய்யா பாசறை மக்கள் கட்சி – அய்யா பாமக என்ற ஒரு கட்சியை ராமதாஸ் துவங்கியிருக்கிறார். 2026 சட்டமன்றத் தேர்தலை சந்திக்க இருக்கும் இந்த கட்சி முகிலன் என்பவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ராமதாஸ் தரப்பு நிலையச் செயலாளர் அன்பழகன் மகன்தான் இந்த முகிலன் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள இக்கட்சியானது பாமகவின் அதே நிறம் மற்றும் அடையாளங்களை உள்ளடக்கியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அமமுக கொடியில் ஜெயலலிதாவின் முகம் இடம்பெற்றிருப்பதைப் போல, பாமக கொடியின் வண்ணங்களோடு டாக்டர் ராமதாஸின் முகத்தைப் பதித்து புதிய கொடி உருவாக்கப்பட்டுள்ளது.

கட்சியின் நிர்வாகப் பொறுப்புகளைத் தனது நம்பிக்கைக்குரியவர்களிடம் ஒப்படைக்கும் நோக்கில், ராமதாஸின் வலதுகரமாகச் செயல்படும் தலைமை நிலையச் செயலாளர் அன்பழகனின் மகன் முகிலன், இக்கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த புதிய கட்சியின் மூலம் வரும் சட்டமன்றத் தேர்தலில் குறைந்தபட்சம் 50 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த ராமதாஸ் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தனது தீவிர ஆதரவாளர்கள் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்து, வேட்பாளராக களம் இறங்க திட்டம் வைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

error: Content is protected !!