100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக ஊரக வாழ்வாதார இயக்கம் துறை சார்பில் மகளிர் திட்ட பணியாளர்கள் இருசக்கர வாகனம் பேரணியில் ஈடுபட்டனர்.
தஞ்சை பழைய கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க துறை மகளிர் திட்ட பணியாளர்கள் 100% வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி இரு சக்கர வாகனத்தில் பேரணியில் ஈடுபட்டனர். இந்த பேரணியை தஞ்சை தாசில்தார் சிவகுமார், உதவி திட்ட இயக்குனர்கள் சீனிவாசன் தில்லை மணி ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்கள். இதில் அனைவரும் 100% வாக்களிக்க வேண்டும். வாக்களிப்பதில் பெருமை கொள்ள வேண்டும். இந்திய

ஜனநாயகத்தில் பங்கு பெறுவோம். தேசம் காக்க வாக்களிப்போம். ஜனநாயக நலன் காப்போம். வாக்களிப்பது நமது உரிமை மற்றும் கடமை. தேசத்தின் மாற்றத்தை விரல் நுனியில் எழுதுவோம். வலுவான ஜனநாயகம் அமைய பங்கு பெறுவோம் உள்ளிட்ட உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்த பேரணி தஞ்சை பழைய கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி ஆற்று பாலம் வழியாக ரயில் அடியில் முடிந்தது. பின்பு ரயிலடியில் வந்த பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு துண்டு பிசுவம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான மகளிர்கள் கலந்து கொண்டனர்.
