திருச்சி மாவட்டம் மணப்பாறை ரெயில் நிலையத்திற்கும் கொளத்தூர்
ரெயில் நிலையத்திற்கு இடையே உள்ள தண்டவாளா பகுதியில் ரெயிலில் அடிபட்டு சுமார் 45 வயது மதிக்கத்தக்க
பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து கிடந்தார்.இந்த சம்பவம் குறித்து தகவல் இருந்து ரெயில்வே இருப்புப் பாதை காவல் உதவி ஆய்வாளர் மகேஸ்வரன் தலைமையில் போலீசார் அங்கு சென்று இறந்து கிடந்த பெண் உடலை கைப்பற்றி பிரேக பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் குறித்து இருப்புப்பாதை போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த பெண் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

