Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சேலத்தில் பயங்கரம்: பள்ளி வளாகத்தில் ஆசிரியை வெட்டிக்கொலை – குழந்தையைக் கொன்று கணவர் தற்கொலை

சேலம் மாவட்டம், ஓமலுார் அக்ரஹாரத்தில் குடியிருந்து வந்தவர் ஸ்ரீவித்யா (43). இவர் காமலாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியை. கணவர் பாலிக்கடையை சேர்ந்த விஜயமுருகன் ( 45) டிரைவர். இவர்களுக்கு 4 வயதில் மகள் உண்டு. விஜயமுருகன்- ஸ்ரீவித்யா இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டு, பாலிக்கடையில் குடியிருந்து வந்தனர். குடிப்பழக்கம் கொண்ட விஜயமுருகன் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால், கடந்த சில ஆண்டுகளாக தம்பதியர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கணவர் அடிக்கடி தாக்கியதாக தொளசம்பட்டி போலீசில் ஸ்ரீவித்யா புகார் அளித்து விசாரணை நடந்துள்ளது.

இந்நிலையில், பாலிகடையிலிருந்து தன் கணவரை பிரிந்து, ஓமலுார் அருகே அக்ரஹாரம் பகுதியில், மகளுடன் தனியாக ஸ்ரீவித்யா வசித்து வந்தார். காலையில் தனது குழந்தையுடன் பள்ளிக்கு சென்றுள்ளார். மதியம், 12:45 மணியளவில் உணவு இடைவேளையில், மாணவர்கள் மற்றும் தனது குழந்தையுடன், ஸ்ரீவித்யா சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது, பள்ளி காம்பவுண்டு சுவர் ஏறி குதித்து, உள்ளே வந்த விஜயமுருகன், தனது மகளை அங்கிருந்து பிடிங்கி கொண்டு செல்ல முயன்றபோது, ஸ்ரீவித்யா தடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விஜயமுருகன், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால், ஸ்ரீவித்யா தலை, முகம் உள்ளிட்ட பகுதிகளில் வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்தியேயே ஸ்ரீவித்யா உயிரிழந்தார். இதை பார்த்த பள்ளி மாணவ, மாணவியர் அச்சத்தில் அலறியபடி ஓடினர். விஜயமுருகன் தனது குழந்தையை துாக்கிக் கொண்டு, மீண்டும் பள்ளி காம்பவுண்டு சுவரை தாண்டி தப்பிச் சென்றார்.
தலைமை ஆசிரியர் சகாதேவன், ஓமலுார் போலீசில் புகார் அளித்தார். அங்கு வந்த ஓமலுார் டி.எஸ்.பி., சஞ்சீவ்குமார் மற்றும் போலீசார், ஆசிரியை உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார். விஜயமுருகன், ஏற்கனவே லாவண்யா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்களை பிரிந்த வாழ்ந்த நிலையில், விஜயமுருகன் இரண்டாவதாக ஸ்ரீவித்யாவை திருமணம் செய்து கொண்டார் என்பது தெரியவந்தது.
இந்நிலையில், விஜயமுருகன் குழந்தைக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு, தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். உடலை இருவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!