மண்டபம் தென் கடலோரப் பகுதியில் நேற்று கடல் பசு ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது, மீனவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மண்டபம் தென் கடலோர் பகுதியில் அய்யனார் கோவில் என்ற கிராமப் பகுதி அருகே இறந்த நிலையில் கடல் பசு ஒன்று கரை ஒதுங்கியது. இந்த கடல் பசுவை பார்த்த மீனவர்கள் மண்டபம் வனச்சராக அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் அங்கு வந்து அதிகாரிகள், கடல் பசுவை கைப்பற்றினார்கள். அதன் பின்னர் பசுவை சோதனை செய்ததில் ஆண் பசு எனவும், பாறைகளில் மோதி காயங்களுடன் இறந்து அழுகிய நிலையில் கரை ஒதுங்கியது தெரிய வந்தது. மேலும் 10 அடி நீளமும், ஆயிரம் கிலோ எடை அளவு வரை இருக்கும் என அதிகாரிகள் மதிப்பீடு செய்தனர். பின்னர் இறந்த கடல் பசுவை உடல் கூறு ஆய்வு செய்து அப்பகுதியிலேயே மணலில் புதைத்தனர்.
