Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரியலூர்..காவல்துறையினர் தபால் வாக்கு செலுத்தும் பணி தொடக்கம்

தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகின்ற 23ம் தேதி நடைபெறுகிறது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவிற்கான விரிவான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
அரியலூர் சட்டமன்ற தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரும் அரியலூர் கோட்டாட்சியருமான த.பிரேமி தலைமையில், காவலர்களுக்கான தபால் வாக்கு பதிவு செய்யும் பணி நடைபெற்றது. காவல்துறையில் பணிபுரியும் காவலர்கள், ஓய்வு பெற்ற காவல் துறையினர்,ஊர்காவல் படையினர் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட 600 க்கும் மேற்பட்ட காவலர்கள் தங்களது தபால் வாக்குகளை அரியலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பதிவு செய்து வருகின்றனர். தேர்தலில்

பணிபுரியும் காவலர்களின் பட்டியலை கொண்டு வருகை தந்த காவலர்களின் அடையாள அட்டைகளை பரிசோதித்த பின்னர் அவர்களின் கைகளில் அழியாதமை வைக்கப்பட்டது. பின்னர் காவலர்களுக்கு வாக்குச்சீட்டும் அவர்களுக்கு பணி ஆணை வழங்குவதற்கான அத்தாட்சி கடிதமும் வழங்கப்பட்டது. காவலர்களின் பணிக்கான அத்தாட்சி கடிதத்தில் மாவட்ட அளவிலான காவல்துறை அதிகாரி கையொப்பமிட்டு வழங்கியவுடன் காவலர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட வாக்கு சீட்டில் தங்கள் வாக்குகளை செலுத்தி பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த வாக்கு பெட்டிகள் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
அரியலூர் சட்டமன்ற தொகுதியில் காவல்துறை வாக்காளர்கள் 424 பேரும், பிற சட்டமன்ற தொகுதி காவல்துறை வாக்காளர் 192 பேர் என மொத்தம் 600க்கும் மேற்பட்ட காவலர்கள் தங்களது தபால் வாக்குகளை பதிவு செய்ய விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்கு சாவடி மையத்தில் அங்கீகரிக்கப்பட்ட முகவர்களின் முன்னணியில் காவலர்களின் தபால் வாக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. வாக்குப்பதிவு நடைபெறுவதால் அரியலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்கு பெட்டிக்கு வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு போட்டாச்சு அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறைகள் வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

error: Content is protected !!