இன்று (மே 2) நாடு முழுவதும் “Cell Broadcast” எச்சரிக்கை அமைப்பை, மத்திய அரசின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் சோதனை செய்கிறது.
வெள்ளம், நிலநடுக்கம் போன்ற பேரிடர் காலங்களில் பொதுமக்களை உடனே எச்சரிப்பதற்காக இந்த சோதனை நடத்தப்படுகிறது.
எனவே, இன்று உங்கள் செல்போன்களுக்கு அதிக சத்தத்துடன் “அலர்ட் மெசேஜ்” வந்தால் அச்சப்பட தேவையில்லை. அது சோதனைக்கானதே மத்திய அரசு மற்றும் தொலைத்தொடர்புத் துறை இணைந்து மேற்கொள்ளும் இந்தச் சோதனையானது, பேரிடர் மேலாண்மைத் திறனை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கியமான முயற்சியாகும்.
